×

வாகன சோதனையின்போது போதையில் பைக்கில் வந்தவரிடம் ரூ.12 ஆயிரம் கேட்டு எஸ்ஐ அடாவடி: வைரலாகும் வீடியோ

புழல்: செங்குன்றம் அருகே, மதுபோதையில் பைக்கில் வந்தவரிடம் ரூ.12 ஆயிரம் கேட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. ஆவடி கால் ஆணையரகத்திற்கு உட்பட்ட பாடியநல்லூர் சோதனைச்சாவடியில், செங்குன்றம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரை, நிறுத்தி அவரை சோதனை செய்தனர். அப்போது அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் செங்குன்றம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் ‘‘போதையில் எப்படி வாகனம் ஓட்டலாம்’’ என கேட்டு அதற்குண்டான அபராத தொகையாக ரூ.12,000 செலுத்த வேண்டும் என கூறியதாக தெரிகிறது. அப்போது, ராஜேந்திரன் வாகன வாகன ஓட்டியிடம், ரூ.12,000 அபராத தொகை செலுத்துவதற்கு பதிலாக ரூ.4,000 என்னிடம் கொடுத்துவிட்டு வாகனத்தை எடுத்துச் செல்’’ என கூறியதாக தெரிகிறது. இதனால் இருவருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்நிலையில், எஸ்ஐ ராஜேந்திரன், போதையில் இருந்த வாகன ஓட்டியை தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் தெரிகிறது. அப்போது, பைக்கில் வந்தவர் தன்னிடம் ரூ.800 மட்டுமே உள்ளது. அதனை வாங்கிக் கொண்டு வாகனத்தை விட்டுவிடுமாறு கெஞ்சியும், சிறப்பு உதவி ஆய்வாளர் வாகனத்தை கொடுக்க முடியாது என கூறுகிறார். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பைக்கில் வந்தவரிடம் பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சியை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

The post வாகன சோதனையின்போது போதையில் பைக்கில் வந்தவரிடம் ரூ.12 ஆயிரம் கேட்டு எஸ்ஐ அடாவடி: வைரலாகும் வீடியோ appeared first on Dinakaran.

Tags : SI Adavadi ,Sengunram ,Dinakaran ,
× RELATED கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில்...